சிறையில் இருந்த 06 கைதிகள் தப்பியோட்டம்
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்த 06 கைதிகள் இன்று காலை தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்கள் ஹெரோய்ன் மற்றும் வீடுகளை உடைத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments