Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமியர்கள் உரிமைகளை ஐ.நா. பாதுகாக்க வேண்டும்: தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள்

இஸ்லாமியர்கள் உரிமைகளை ஐ.நா. பாதுகாக்க வேண்டும் என்று தமிழக இஸ்லாமிய  அமைப்புக்கள் கோரிக்கை வைக்க உள்ளன. 
இந்தியாவில் வாழக்கூடிய 23 கோடி இஸ்லாமியர்களின் தலாக் முறையை ஒழித்து பெண் உரிமையைக் காப்பாற்றும் நோக்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாக முழங்குகிறது மத்தியில் ஆளக்கூடிய பாஜக. ஆனால் இஸ்லாமியர்கள் பொது சிவில் சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.  
இந்நிலையில், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உரிமையைப் பாதுகாக்க போராட்டக் களத்தில் குதித்துள்ளார் தமிழகத்தின் இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் அப்துல்ரஹீம். இவர் அக்டோபர் 28ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி வாலஜா பள்ளிவாசலில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களிடம் கையெழுத்துப் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.  
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டு அதை ஐநா சபைக்கு அனுப்பி வைப்பது, இதன்மூலம் இந்தியாவில் வாழக்கூடிய இஸ்லமியர்கள் உரிமையைப் பாதுகாக்க ஐநா சபை தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க உள்ளார் இவர். இந்த கையெழுத்துப் பிரச்சாரத்தை இந்திய முழுக்க கொண்டுசெல்லவும் திட்டமிட்டதாகவும் கூறுகிறார் ரஹீம்.

Post a Comment

0 Comments