Ticker

6/recent/ticker-posts

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 8 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை இரவு முதல் 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பேஸ்லைன் வீதி, களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி வரையிலான பகுதி, செட்டியார் தெரு, கொழும்பு-13, கொழும்பு-14 மற்றும் கொழும்பு-15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாளை இரவு 9 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments