Ticker

6/recent/ticker-posts

அமரதேவவின் விருப்பத்தின்படி உடல் கொழும்பு வைத்திய பீடத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளது

சிங்கள சாஷ்திரிய சங்கீதத்தின் பிதாமகர்களில் ஒருவரான ‘பண்டித்’ டபிள்யூ.டி.அமரதேவ நேற்று வியாழக்கிழமை காலமானார்.
அவரின் மறைவை அடுத்து ஒரு வார கால தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 
அவரது உடல், இன்று வெள்ளி
க்கிழமை காலை 10.00 மணி முதல் நாளை  சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனை அடுத்து, பூரண அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறும்.
இதேவேளை, பண்டித் டபிள்யூ.டி.அமரதேவவின் விருப்பத்தின்படி, இறுதிக் கிரியைகளை அடுத்து அவரது உடல் கொழும்பு வைத்திய பீடத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments