(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கண்டி மாநகரில் புகழ் பூத்த முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் ஸமத் இஸ்மாயில் தனது 93 ஆவது வயதில் திங்களன்று (07) காலமானார்.
இவர், முன்னாள் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபரும், தேசமான்ய ஜெஸீமா இஸ்மாயிலுடைய மைத்துனரும், முன்னாள் சபா நாயகர் எம்.எச். முஹம்மதுடைய உறவினரும் ஆவார்.
பாராளுமன்றத்தின் முன்னாள் படைக்கள சேவிதர் எம்.எம். இஸ்மாயில் உடைய மகனும் ஆவார். விளையாட்டுத்துறையிலும் நன்கு பிரகாசித்தவர். முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களோடு மிகவும் நெருங்கி, உறவாடி அநேகர் மத்தியிலும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு பாடுபட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் தான் இப்போது கண்டி மாநகரத்தின் நடுவில் இருக்கின்ற மணிக்கூட்டு கோபுரத்தை அமைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்னாருடைய இழப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அன்னாருக்கு உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக! என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments