(எம்.எஸ்.எம். ஸாகிர்)
ஷரியாக் கவுன்சில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி கொழும்பில் ஷரியா மாநாடொன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
கொழும்பு உம்முசாவியாப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஷரியாக் கவுன்சிலின் விசேட கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஷரியா கவுன்சில் செயலாளர் மௌலவி எம்.பி.எம். ஹிஷாம் தெரிவித்தார்
கவுன்சிலின் ஆயுட்காலத் தலைவர் ஜனாதிபதியின் சர்வ மத ஆலோசகர் கலாநிதி மௌலவி ஹஸ்புல்லாஹ் தலைமையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கவுஸ்சிலின் பிரதித் தலைவர் கலிபதுல் குலபா மௌலவி ஜே. அப்துல் ஹமித், இந்த மாநாட்டை நடத்துவது காலத்தின் தேவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஷரியாக் கவுன்சிலின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் அஸ் செய்யத் அலவி மௌலானா ஆகியோருக்கு விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இங்குரையாற்றிய தலைவர் கலாநிதி ஹஸ்புல்லா காதர், சன்மார்க்க விடயங்களில் மக்கள் மத்தியில் கருத்து மோதல்கள் ஏற்பட்டால், அவைகளை அன்பாலும் பொறுமையாலும் பேசிக் கொள்வதன் மூலம் அமைதி நிலவும் என்றார்.
0 Comments