Ticker

6/recent/ticker-posts

உலகப் புகழ்பெற்ற ஆப்கான் அகதிப் பெண்ணுக்கு பெங்களூரில் சிகிச்சை

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஷர்பாத் குலா. பச்சை நிற கண்களை கொண்டவர். இவர் சிறுமியாக இருந்த போது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி பாகிஸ்தானில் அகதியாக தஞ்சம் புகுந்தார். கடந்த 1984-ம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் இதழால் ஆப்கன் போரின் முகம் என்று வர்ணிக்கப்பட்டார் இவரது போட்டோ வெளியாகி உலகம் முழுவதும் பரப்பாக பேசப்பட்டு பிரபலமானார்.

இவரது வித்தியாசமான முகத்தோற்றத்துடன் கூடிய போட்டோ அதை எடுத்து போட்டோ கிராபர் ஸ்டீவ் மெக்குரிக்கு விருது பெற்று தந்தது இதற்கிடையே பாகிஸ்தானில் தங்கியிருந்த அவர் அங்கேயே  ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி 3 குழந்தைகளுக்கு தாயானார். தற்போது அவருக்கு 44 வயதாகிறது. இந்த நிலையில் அவர் சட்ட விரோதமாக குடியேறியதாக கூறி பாகிஸ்தானில்  இருந்து வெளியேற்றப்பட்டு சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பு அனுப்பப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் சென்ற ஷர்பாத் குலா மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான சிகிச்சை வசதி ஆப்கானிஸ்தானில் இல்லை.

எனவே, அவருக்கு பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடு களை மத்திய அரசு செய்துள்ளது.

அதற்காக இந்தியாவுக் கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷாய்தா அப்தலி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா ஆப்கானிஸ்தானின் உண்மையான நண்பன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments