Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.க வை விமர்சிக்கும் ஸ்ரீலசுக அமைச்சர்கள் அரசாங்த்திலிருந்து வெளியேறுங்கள்! முஜீபுர் றஹ்மான்

அரசாங்கத்தில் இருக்கும் சில அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்றாற்போல செயல்படும் கொந்தராத்து காரர்கள் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் நேற்று கருத்துத் தெரிவித்தார்.

நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாக சிரிகொத்தாவில் இடம் பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒவ்வொரு இடங்களில் அரசாங்கத்திற்கும் ஐதேகட்சிக்கும் கருத்து எதிராக  தெரிவித்து திரிவதை விட்டு விட்டு அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுமாறும், அப்படி அவர்கள் விலகிச் செல்வதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments