தீவிரவாத வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தானில் அமைக்கப்பட்ட சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் இன்று சனிக்கிழமை முதல் செயல்பாடுகளை நிறுத்தவுள்ளன.
2014 ஆம் ஆண்டு ராணுவ பள்ளி ஒன்றில் 130-க்கு மேலான மாணவர்களின் படுகொலையில் ஈடுபட்டோரை விசாரித்து தண்டனை வழங்க இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
2014 ஆம் ஆண்டு ராணுவ பள்ளி ஒன்றில் 130-க்கு மேலான மாணவர்களின் படுகொலையில் ஈடுபட்டோரை விசாரித்து தண்டனை வழங்க இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இன்றுவரை 12 பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மொத்தம் 160 பேருக்கு இந்த நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கியுள்ளன.
இதே காலத்தில் சிவில் நீதிமன்றங்களின் மூலம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கையை விட இது மிகவும் குறைவாகும்.
நீதிக்கான வழிமுறைகளை இத்தகைய ராணுவ நீதிமன்றங்கள் விரைவுபடுத்தும் என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த வழக்குகள் ரகசியமாக நடத்தப்படுவதை விமர்சித்திருக்கின்ற மனித உரிமை குழுக்கள், குற்றத்தை ஏற்றுகொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளன. bbc.com/tamil/

0 Comments