Ticker

6/recent/ticker-posts

வெறுப்புப் பிர­சாரம் : ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முறைப்­பாடு

ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து இஸ்­லாத்தை இழி­வு­ப­டுத்­து­கின்­ற­மைக்கு எதி­ராக நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 


பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னினால் குறித்த முறைப்­பாடு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.
இதன்­போது கருத்து தெரி­வித்த கொழும்பு மாவட்ட பாரா­ளுமன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்,
மீண்டும் இந்­நாட்டில் இன­வா­தத்தை தூண்ட ஒரு­சில சக்­திகள் முயற்சி செய்­கின்­றன. முக்­கி­ய­மாக ஞான­சார தேரர் இந்­நாட்டை பிரிக்கும்
செயற்­பா­டு­க­ளிலும் 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்­ததை போன்று மக்­க­ளி­டத்தில் இன­வா­தத்தை பரப்பும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

ஒரு சமய தலைவர் எவ்­வி­த­மான பொறுப்­பு­ணர்­வு­மின்றி இந்­நாட்டு மக்­களின் மனங்­களில் கொடூர எண்­ணங்­களை விதைக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வது மிகவும் வேத­னை­யான விட­ய­மாகும். தற்­போது மீண்டும் அவ­ரது இன­வாதக் கருத்­துக்­களை கொண்டும் சமய பிரி­வி­னை­வா­தத்தை கொண்டும் இந்­நாட்டு மக்­களை பழி­வாங்க முனை­கின்றார். இதற்­கெ­தி­ரா­கவே பொலிஸ் நிலை­யத்தில் இன்று முறை­யிட வந்தோம்.

அனைத்து மக்­க­ளையும் பாது­காப்­ப­தா­கவும் அனைத்து மதத்­துக்கும் சம அந்­த­ஸது வழங்­கு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்தே நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. இவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை ஆரம்­பித்­தி­ருக்கும் ஞான­சார தேரரின் செயற்­பா­டு­களை கண்­டிக்க வேண்டும், சம­யத்தை கொண்டு ஏனை­யோரை தண்­டிக்கும் செயற்­பாட்டை அவர் உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரிக்கை விடுக்­கின்றோம்.

அவ்­வாறு பொலிஸ்மா அதிபர் நீதியை நிலை­நாட்­டா­விட்டால் தொடர்ந்து கடு­மை­யான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுவோம் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.

வெல்­லம்­பிட்­டிய கொஹி­ல­வத்தை பள்­ளி­வா­ச­ல்களிலும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேரர் பொல­ந­று­வையில் கூறி­ய­தைப்­போன்று கொடி­கா­வத்தை சம்­ப­வத்­துக்கும் அவ­ருக்கும் சம்­பவம் உள்­ளது என்றே தோன்­று­கின்­றது.

மீண்டும் இனவாதத்தை தூண்டி சமய பிரசாரங்களை கொடூரமான வகையில் மக்களிடத்தில் கொண்டு செல்லும் போக்கினை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் இனிவரும் எதிர்ப்பு செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றார்.

 இந்த முறைப்பாட்டை கையளிக்கும்போது முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முக்கியஸ்தர் அஸீஸ் நிஸாருதீன் மற்றும் ஆர்.ஆர்.ரீ. அமைப்பின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உள்ளிட்டோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி : விடிவெள்ளி

Post a Comment

0 Comments