ஒருகோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலே நகரிற்கு கொண்டு செல்வதற்காக ஹெரோயின் கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார்.
ஒருகிலோ 26 கிராம் ஹெரோயினுடன் 53 வயதான சந்தேகநபர் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப்பொதியில் மிக சூட்சுமமாக வைத்து ஹெரோயின் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments