Ticker

6/recent/ticker-posts

11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

களனி, பேலியகொடை, வத்தளை உள்ளிட்ட கொழும்பின் சில பகுதிகளிலும், கம்பஹாவிலும் 11 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்சார சபையில் அத்தியாவசியமான பழுதுபார்க்கும் வேலைத்திட்டம் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயற்றுகிழமை இவ்வாறு 11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த தினத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் 31 ஆம் திகதி 9 மணிநேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்துடன், 31ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதோடு, ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் கீழுள்ள நீர் குழாய் பிரதான நீர் குழாயுடன் இணைக்கப்படுவதனால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments