Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது என்று நவாஸ் ஷெரீப்பின் தகுதி நீக்கம் குறித்து இம்ரான் கான் கருத்து

பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது என்று நவாஸ் ஷெரீப்பின் தகுதி நீக்கம் குறித்து பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கருத்து தெரிவித்துள்ளது.
பனாமா ஊழல் வழக்கல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தனது பதவியை நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்துள்ளார்.

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபுக்கு தொடர்பிருப்பதாக தொடர்ந்து குரல் கொடுத்து அதனை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தானின் பிற கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
பனாமா பேப்பர்ஸ் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது நல்லது. உண்மைக்கும் நீதிக்கும் வெற்றி கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளது.
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவர் ஷா மெக்மூத், “இது ஒரு வரலாற்று வெற்றி. இந்த வெற்றி பாகிஸ்தானை மேலும் வலுப்படுத்தும். இனி நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை அகற்றுவோம். ஆயுதப் படையினர், போலீஸார், சட்ட அமலாக்க துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோன் “என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சமான் கைரா கூறும்போது, ”நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்பாரதது. அனைத்து எதிர் கட்சிகளும் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் வரை கொண்டுச் சென்று போராடிய இம்ரான் கானின் கட்சிகே இந்த வெற்றி சேரும்” என்றார்.

Post a Comment

0 Comments