Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாரின் விடுதலைக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்காவில் சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறை வாசத்தை அனுபவித்த பாதிரியாரின் விடுதலையை எதிர்த்து அவரால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஸ்டனில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1960- 70களில்  பாதிரியாராக இருந்தவர் பால் ஷான்லே. அப்போது அவர் ஒரு சிறுவனைப் பாலியல் வன்முறை செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பாதிரியார் தங்களையும் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து திருச்சபையில் ஒரு சிறுவனைப் பாலியல் வன்முறை செய்த குற்றத்துக்காக, வத்திக்கான் அவரைப் பாதிரியார் பதவியில் இருந்து நீக்கியது. அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரிட்ஜ்வாட்டர் என்னும் பகுதியில் உள்ள மஸ்ஸாசூசெட்ஸ் சிறையில் இருந்த ஷான்லே, வெள்ளிக்கிழமை அன்று விடுதலையாவதாக இருந்தார்.
அதைத் தொடர்ந்து அவரின் விடுதலைக்கு எதிராகப் போராடிய பாதிக்கப்பட்டவர்கள், 86 வயது பாதிரியாரின் விடுதலைக்குப் பிறகு அவர் கண்காணிப்பில் இருக்க மாட்டார் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் கண்காணிப்பில்தான் இருப்பார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments