நாட்டில் முன்னறிவிப்பற்ற திடீர் மின்விநியோகத் தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி செயற்பாடுகள் குறைந்துள்ளதும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஸ்தப்பித்துள்ளதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்பாரதவிதமாக மின்சார தடை ஏற்படும் என மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தற்போது நிலவும் கேள்விக்கு ஏற்ற அளவு மின்சாரத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
எரிபொருள் இன்மையால் எம்பிலிபிட்டிய மின் ஆலையில் இருந்து பெறப்படும் 100 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய கிடைக்காமையும் இந்த நிலமைக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments