மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை எல்ல மற்றும் திக்ஆராவ பகுதிகளில் இருந்து மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று (27) மாலை பெய்த கடும் மழை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
வௌியேற்றப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களை வௌியேற்ற நடவடிக்கை எடுத்த போது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுளை – கொழும்பு பிரதான மார்க்கத்தை மறித்து மக்கள் நேற்று இரவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். Newsfirst
0 Comments