Ticker

6/recent/ticker-posts

ஏவுகணை பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை

சிரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் நிலைப்பாடு மோசமாகி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் சிரியாவிற்கு எதிராக கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். 
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் ஏவப்படும் எல்லா ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்துவோம்  என்று அதற்கு பதிலடியாக ரஷ்யா கூறியுள்ளது.


ரஷ்யாவிற்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்ப் ''தயாராக இரு ரஷ்யா. ஏனெனில் அமெரிக்க ஏவுகணைகள் வரும். ரசாயன வாயுவை செலுத்தி சொந்த நாட்டு மக்களை அழித்து மகிழ்ச்சி காணும் விலங்குடன்  அதாவது சிரிய ஜனாதிபதி அசாததுடன்; நீங்கள் கூட்டாக செயல்படக் கூடாது'' என்றும் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு ரஷ்ய எம்.பி.க்களும் பதிலளித்துள்ளனர்.  சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீசினால், அதை போர் குற்றமாக ரஷ்யா கருதும் என்றும் அதன்பிறகு ரஷ்யா - அமெரிக்கா இடையே நேரடி போர் ஏற்படும் என்றும் பதிலுக்கு ரஷ்ய எம்.பி.க்களும எச்சரித்துள்ளனர்.

Post a Comment

0 Comments