Ticker

6/recent/ticker-posts

உலகின் வயதான ஜப்பானிய மனிதருக்கு கின்னஸ் உலக சாதனை விருது!

ஜப்பானின்  ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள அஷோரா நகரில் வசிக்கும் மசாசோ நொனாகா, 1905 ஜூலை 25-ம் திகதி பிறந்தார். இவர் உலகின் மிக வயதான மனிதராக கருதப்படுகிறார். இவருக்கு வயது 112. இவரின் வயதை கின்னஸ் உலக சாதனை அமைப்பு நேற்று முன்தினம் அங்கீகரித்தது. இதற்கான சான்றிதழை இந்த அமைப்பின் அதிகாரிகள் மசாசோவின் வீட்டுக்கே சென்று வழங்கினர்.

இதுகுறித்து மசாசோவின் பேத்தி யுகோ கூறும்போது, “எனது தாத்தா நலமாக உள்ளார். இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். தினமும் செய்தித்தாள் படிக்கிறார்” என்றார்.
மசாசோவுக்கு 7 சகோதரர்கள் 1 சகோதரி உள்ளனர். மசாசோ 1931-ல் ஹட்சுனோ என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

Post a Comment

0 Comments