( ஐ. ஏ. காதிர் கான் )
உலக தரத்துடன் கூடிய கடலோரப் பூங்கா ஒன்று, கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரை, அமெரிக்க டொலர் 300 மில்லியன் முதலீட்டில் அமைப்பதற்கு, பெருநகர மேற்கு அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைச்சரவை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நிதி அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆகியன இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், சுற்றாடல் தொடர்பிலான ஆய்வுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கை கரையோரப் பிரதேசம், உலக தரம் கொண்டதாக மாத்திரமின்றி, பொழுது போக்கு மற்றும் களியாட்ட வசதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments