டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் அமைத்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி இவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தல் விடுத்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோத்தா உட்பட ஏழு போ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments