Ticker

6/recent/ticker-posts

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேரை நியமிக்க சிறிசேன முயற்சி!


அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேரை நியமிக்க  ஜனாதிபதி சிறிசேன  தயாராகி வருகிறார்.

சட்ட த்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றியவர்கள் மற்றும் நாட்டிற்கு சேவை செய்தவர்களை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக பதவி வழங்க   அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை வைத்தே இந்த புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கு பொருத்தமான வழக்கறிஞர்களின் பெயர்  பட்டியல் ஒன்று  ஒரு சிறப்பு ஆலோசனைக் குழுவால் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதற்கான நியமனங்கள் ஜனவரியில் வழங்கப்படவிருப்பதாகவும் அறியவருகிறது.

Post a Comment

0 Comments