Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரரின் வழக்கு 2019 பெப்ரவரி 08ம் திகதிக்கு பின்போடப்பட்டது!


நாவல ராஜகிரிய பகுதியில் வீதி வாகன பரிசோதனையில் இருந்த  போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த 7ம் திகதி விசாரணைக்கு  வந்த இந்த வழக்கே எதிர்வரும் 2019 பெப்ரவரி மாதம் 08ம் திகதிக்கு பின்போடப்பட்டது.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும்  ஞானசார தேரர் தற்போது சுகவீனமுற்று ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவலையடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணையை கொழும்பு மேலதிக நீதவான் நெரஞ்சனா த சில்வா அடுத்த வருடம் வரை பின்போட்டுள்ளார்.

கொழும்பு திட்டமிடப்பட்ட குற்ற விசாரணை பொலிஸ் பிரிவு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

Post a Comment

0 Comments