Ticker

6/recent/ticker-posts

மஹிந்தர் நாளை விஷேட உரையின் பின்னர் ராஜினாமா செய்வாராம் புதல்வர் நாமல் அறிவிப்பு ..


சட்டத்திற்கு முரணாக பிரதமர் பதவியை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மஹிந்த ரஜபக்ஷ  நாளை சனிக்கிழமை நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக  மஹிந்தவின் புத்திரரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய  நாமல் ரஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே இவ்வாறு  கூறினார். 

அவர் தனது பிரதமர் பதவியில் இருக்கும் வரை வேறொரு பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது போகும் என்பதால´ மஹிந்த ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறினார். 

நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்திவிட்டு அவர் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments