Ticker

6/recent/ticker-posts

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவா வாடுகே சிரில் மற்றும் மூத்த பேராசிரியர் பிரியந்த குணவர்தன ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

கடந்த 03ம் திகதி மருதானையில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் 18ம் திகதியும் அவர் இதுபோன்று நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் இந்த கருத்து தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றில் கேட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments