பிரான்ஸ் நாட்டில் டீசல் மீதான வரியை எதிர்த்து கடந்த நான்கு வாரங்களாக பொதுமக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனா்.
கடந்த வாரம் எதிா்ர்ப்பு போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரச சொத்துக்களும், தனியார் சொத்துக்களும் தாக்கப்பட்டன. பொலிஸாரோடு பொதுமக்கள் மோதியதால் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுவரை 400க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல வாரங்களாக போராட்டம் தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈபில் கோபுரமும், அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments