Ticker

6/recent/ticker-posts

ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நேகம முஸ்லிம் பாடசாலை மைதான புனர்நிர்மாண பணிகள் ஆரம்பம்

பல வருடங்களாக புனர்நிர்மாணம்  செய்யப்படாமல் இருந்த  நேகம முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாட்  பதியுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 40 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு   புனர் நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கல்னேவ பிரதேச சபையின் உறுப்பினரான எம்.எல்.ஹிஜாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  இஷாக் ரஹ்மானின்  ஆலோசனையில் இந்த வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது 

கடந்த 3 மாதங்களுக்கு முன் நேகம முஸ்லீம் மாகா வித்தியாலயத்திக்கு விஜயம் செய்த ரிஷாட்  பதியுதீன் அடிக்கல்லை நாட்டி வைத்தார். இவ்வேலைத்திட்டம்  துரிதமாகப்பட்டு ஒருமாதமாக காலத்துக்குள் நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments