Ticker

6/recent/ticker-posts

மூன்று தினங்கள் முற்றுகைக்கு உள்ளாகப்போகும் மைத்திரி!

அடுத்த வாரம் 13ம் திகதி இலட்சக் கணக்கான மக்களை  கொழும்பில் குவித்து, சிறிசேன ஜனாதிபதியின்  வீடு மற்­றும் அவ­ரது செய­ல­கத்தை முடக்கும் ஒரு போராட்டத்தை  நடத்­து­வ­தற்கு ஐக்­கிய தேசி­ய முன்னணியும், சிவில் அமைப்புகளும், தொழிற் சங்கங்களும் தயா­ராகி வரு­கின்றன.

சுமார் இரண்டு  இலட்­சம் மக்களைக் கொண்டு வந்து, கொழும்­பில் குவித்து சிறிசேனவின் செயற்பாடுகளை மூன்று தினங்களுக்கு  முற்றாக முடக்குவதற்கு ஒரு போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்  அறிய வருகிறது.

ஜனாதிபதி சிறிசேன அண்மைக்காலங்களில் எடுத்த அரசியல் முடிவுகள் நாட்டில் பலத்த அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.  தன்னால் திருடர்கள், கொலைக்காரர்கள், ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்ட மஹிந்த தரப்புக்கு யாருக்கும் தெரியாமல் ஒரே இரவில் ஆட்சியை கைமாற்றிய கடந்த ஒக்டோபர் 26ம் திகதியிலிருந்து நாடு ஸ்திரத்தன்மையை இழந்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. 

சிறிசேனவின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாட்டுக்கு சர்வதேசம் பலத்த அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் நாட்டில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்தப் பாரிய முற்றுகை  போராட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும்  ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தமது இறுதி இலக்கை அடையும் வரை சிறிசேனவுக்கு எதிராக இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments