Ticker

6/recent/ticker-posts

வவுனியா பூவரங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

 வவுனியா பூவரங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவர் 2010ம் ஆண்டு கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வேளை ஒருவரை தாக்கி சித்திரவதை செய்தது தொடர்பாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நேற்று இரவு இவர் கைது செய்யப்படும் போது சுகவீனமுற்று களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது மஹர நீதிமன்றில் வழக்கு விசாரணையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments