முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க இன்று முல்லைத்தீவு பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக அறிய வருகிறது.
ஹெலிகொப்டர் மூலம் காலை முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளார். காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சந்திரிக்கா கலந்து கொள்ளவுள்ளார்.
முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கர்ப்பிணி தாய்மார்களை பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரமொன்றையும் சந்திரிகா வழங்கவுள்ளார்.

0 Comments