Ticker

6/recent/ticker-posts

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக எச்.ஜி. சுமணசிங்க

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை சுங்கப் பணியாளர்கள் நேற்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக இலங்கை சுங்க சேவையிலோ அல்லது நிர்வாக சேவை தகுதியோ இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமானது. 

இந்நிலையிலேயே நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments