இராணுவ அலுவலக பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ தளபதிக்கு அடுத்த அதிகாரம் உள்ள பதவியாக இந்த அலுவலக பிரதானி திகழ்கிறது.
இறுதி யுத்தத்தின் போதுஇராணுவத்தின் 58வது படையணி இவரது தலைமையில் செயற்பட்டது.
1984ம் ஆண்டு சவேந்திர சில்வா இராணுவத்தில் இணைந்துள்ளார். இவர் கஜபா படைப்பிரிவை சேர்ந்தவர். புலிகளுடனான இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன.
1964ம் ஆண்டு ஜுன் மாதம் 22ம் திகதி பிறந்த இவர் மாத்தளை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.
வீரவிக்ரம, விபூசண, ரணசூர போன்ற இராணுவத்தின் அதி உயர் பதக்கங்களை சவேந்திர சில்வா பெற்றுள்ளார்.

0 Comments