Ticker

6/recent/ticker-posts

ஒஸ்லோ நகர உதவி மேயர் கம்சாஜினி குணரத்னம் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்தார்.

நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின் உதவி மேயராக இருக்கும் கம்சாஜினி குணரத்னம் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தில் இந்நத சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  கம்சாஜினிக்கு ஜனாதிபதி சிறிசேனவினால் ஞாபகார்த்த அன்பளிப்பு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

கம்சாஜினியின் சிறிசேனவுடனான சந்திப்பை ஒரு சில சிங்கள இணையதளங்கள் தமிழ் டயஸ்போராவுடனான சிறிசேனவின் சந்திப்பு எனவும் வர்ணித்துள்ளன. குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் கம்சாஜினி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்ய இருப்பதாகவும் அறியவருகிறது.

நோர்வே நாட்டில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் நோர்வே தொழிலாளர் கட்சி சார்பாக அதன் தலைநகர் ஒஸ்லோவில் போட்டியிட்டு துணை மேயராக இலங்கையரான கம்சாஜினி தெரிவாகியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments