Ticker

6/recent/ticker-posts

அடுத்த மாதம் மோடியை மஹிந்த சந்திக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக அறியவருகிறது.
இந்த அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ பெப்ரவரி முதல் வாரத்தில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் என்று, மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கையில்  ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்று  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.
அரசியல் சதித் திட்டம் தோல்வியில் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Post a Comment

0 Comments