ஜனாதிபதி சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபகஷ மீதான கொலைச் சதி ஒன்று தொடர்பாக தகவல்களை வெளியிட்டு பிரபலமான நாமல்குமாரவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
இவர் இராணுவத்தில் கடமையாற்றியதாகவும், இராணுவத்தை விட்டு ஓடிய நபரென்பதால் நாமல் குமார மீது விசாரணையை தொடங்கவிருப்பதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இராணுவத்தில் சேருவதற்காக நாமல்குமாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்ற தகவல்களும் இப்போது வெளியே கசிந்துள்ளன.
நாமல்குமார மீது குற்றவியல் புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் மேற்கொண்டிருப்பதாகவும் இந்த விசாரணைகள் முடிவடைந்ததன் பின்னர் நாமல் குமார மீதான இராணுவத்தின் விசாரணைகள் ஆரம்பமாகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தள்ளார்.

0 Comments