Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமிய பன்னூலாசிரியர் ஆயிஷா லெமு மறைந்தார்!


மிகச் சிறந்த இஸ்லாமிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஆயிஷா லெமு. இவருடைய  அருமையான சில நூல்கள் தமிழிலும் வெளிவந்துள்ளன. 

ஆயிஷா லெமு இங்கிலாந்தில் 1940இல் பிறந்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். 

தனது கணவருடன் 1966ல் நைஜீரியாவில் குடியேறினார். முதலில் பள்ளிக்கூட ஆசிரியைவாகவும் பிறகு கல்லூரியின் முதல்வராகவும் கல்வி பணியாற்றினார். இத்துடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து மார்க்க மற்றும் சமுதாய பணியாற்றி வந்தார்.

அய்ஷா லெமு ஓர்  உயர் கல்வியியலாளராக திகழ்ந்தார். இவர் எழுதிய  இஸ்லாமிய ஆய்வு நூல்கள் சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்றவை.  

நைஜீரியாவில் முஸ்லீம் பெண்கள் அமைப்புகளின்  கூட்டமைப்பை  , Federation of Muslim Women Associations in Nigeria, (FOMWAN) நிறுவி அதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார். தனது 79 வயதில் 05.01.2019 அன்று நைஜீரியா மின்னா நகரில் ஆயிஷா லெமு உலகைவிட்டு பிரிந்துள்ளார்.

Post a Comment

0 Comments