Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்! - முருத்தட்டுவே ஆனந்த தேரர்

பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை எதிா்வரும் பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என பெவிதி ஹன்ட அமைப்பு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தள்ளது.

ஞானசார தேரர் நாட்டுக்கும், இனத்திற்கும், மதத்திற்கும் ஆற்றியுள்ள சேவையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்  என்று  முருத்தட்டுவே  ஆனந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாராஹேன்பிட்டி அபயாராம விகாரையில்  இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பேசியபோது அவரின்  பாராளுமன்ற உறுப்புரிமையை பறிப்பதற்கு  பதிலாக  அவருக்கு  பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய தேரர்,  ஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால்  எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும் எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments