Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானத்தால் அடிப்படை உரிமை மீறப்பட்டதா? உயர் நீதிமன்ற விசாரணை பெப்ரவரியில்..!


பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தற்கு ஜனாதிபதி  சிறிசேன எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீதான விசாரணக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. 

தம்பர அமில தேரரும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான ஓசல ஹேரத்தும்  இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

குறித்த மனுக்கள் மீதான விசாரணை  இன்று (07) பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டீ.பீ தெனியாய ஆகியோர்கள் முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது.  குறித்த மனுக்கள் மீதான விசாரணையை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என்று றே்படி  மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 ஜனாதிபதி சிறிசேனவின்  இந்த செயற்பாடு காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக  மனுதாரர் தெரிவித்துளளனர். .

Post a Comment

0 Comments