Ticker

6/recent/ticker-posts

சந்திரிக்காவோடு கதைக்காமல் மெதுவாக நழுவிய மைத்திரி!



ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஸ்தாபகர்  எஸ்.டப்லியூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின்  120 வது பிறந்த நாள் விழா தொடர்பான நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.  காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலை அருகே  இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்க சிலைக்கு  மலர் வைத்து மரியாதை  அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்  குடும்ப உறுப்பினர்களும் பங்குபற்றினர்.

எனினும், ஜனாதிபதி சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க ஆகியோருக்கு இடையிலான எந்த உரையாடலும் இடம்பெறவில்லை.  பண்டாரநாயக்காவின் சிலைக்கு  மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், ஜனாதிபதி அந்த விழாவை விட்டு உடனடியாக சென்றதாகவும் அறிய வருகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்கவுடன்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நீண்ட நேரமாக கலந்துரையாடியுள்ளார்.


Post a Comment

0 Comments