இந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை அருந்தியதால் 12 பேர் பலியாகியுள்ளர். மேலும் பலர் கவலைக்கிடமாக நிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரூர்கி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதேவேளை கள்ளச்சாராய விற்பனைக்குத் துணை போன அரச அதிகாரிகள் 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

0 Comments