Ticker

6/recent/ticker-posts

இவ்வருட ஜனாதிபதி திரைப்பட விருது ஜுலை 26 ஆம் திகதி

தேசிய சினிமாவின் கலை விழாவாகக் கருதப்படும் ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழா ஜுலை  26 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாகத்தில்  நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளதாக வீடமைப்பு, கலாசார அமைச்சா்  சஜித் பிரேமதாஸ தொிவித்தள்ளாா்.

2016, 2017,2018 வருடங்களில் திரையிடப்பட்ட  79 திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. 19வது தடவையாக இந்த சினிமா விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கிறது. 11 சினிமா கலைஞா்களுக்கு விஷ்வ கிர்த்தி மற்றும் சுவா்ண சிங்க போன்ற  விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

Post a Comment

0 Comments