Ticker

6/recent/ticker-posts

டாக்டர் ஷாபி பிள்ளை கடத்தலில் ஈடு பட்டிருந்தாரா ?


Dr ஷாபியின் கைது 
இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிகப் பெரிய கறுப்புக் கறை........
அடுக்கடுக்காக திணிக்கப் படும் அநியாயங்கள் !
லங்கா நியூஸ் சிங்கள இணையத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்- பகுதி 2
 தமிழில் எம் எம் முஸம்மில் ( BA Hons ) – பதுளை
பிள்ளையொன்றை கடத்த ஆள்மாறாட்டம் செய்த விடையமொன்று சம்பந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது விடயமாக அறிக்கையொன்றை நீதிமன்றத்திட்கு சமர்பித்த புலனாய்வு துறையினர் , கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது கருவுண்டான பெண் ஒருவர் மகப்பேற்றுக்காக குருநாகல் வைத்திய சாலைக்கு அனுமதியாகியுள்ளார். இராணுவ வீரர் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணத்தால் அந்த  பெண் கருவுற்றுள்ளார்தகாத உறவின் மூலம் பெற்றெடுத்த குறித்த குழந்தையுடன் வீட்டுக்கு வந்தால் அப்பெண்ணை கொன்றுவிடுவதாக அப்பெண்ணின் கணவரால் மிரட்டப் பட்டுள்ளார். கணவனின் மிரட்டலுக்கு பயந்த அப்பெண் குறித்த அந்த வைத்திய சாலையிலேயே எம் எல் டி யாக கடமையாற்றும்  பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு தனது  குழந்தையை வளர்த்துக்கொள்வதற்காக வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார், அதனடிப்படையிலேயே இக்குழந்தை கைமாற்றப் பட்டுள்ளது என்பது குறித்த இரு பெண்களின் வாக்குமூலங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது ”.  என்று புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் ஷாபி பெண்களின் பலோபியன் நாளத்தை நசுக்கியதாகவோ நறுக்கியதாகவோ கண்களால் கண்ட ஒரு  சாட்சியேனும் உள்ளதா. ?????
“147 தாய்மார்களின் பலோப்பியன் குழாய்கள் சேதமாக்கப் பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக கொழும்பு நீதிமன்ற பிரதான வைத்திய அதிகாரியின் உதவியை எழுத்து மூலம் கேட்டதாகவும் அதற்கமைய விஷேட வைத்திய நிபுணர்களான அஜித் தென்ன கோன் , அஜித் பத்திரன , ஜானகி கருனாசிங்க ஆகியோர் இதற்காக நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கான நீதிமன்ற அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. “ என்றும் புலனாய்வு துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளதுஇவர்களின் பலோபியன் நாளம் சேதப் படுத்தப் பட்டுள்ளதா என்பதை கண்டறியஎஸ் எச் ஜிஎனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக கொழுப்பு காசல் வைத்திய சாலையும் , ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையும் தேவையான அனுசரணை வழங்குவதாகவும் இதற்கான நீதிமன்ற உத்தரவையும் பெற்றுள்ளதாக்  புலானாய்வு துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளது
இவ் விசாரணை சம்பந்தமாக 210 பக்கங்களை கொண்ட B அறிக்கையொன்றினை கடந்த 27 ந் திகதி நீதிமன்றில் சமர்பித்த புலனாய்வு துறையினர் , இது சம்பந்தமாக  வைத்தியர் சாபியுடன் பணிபுரிந்த சக ஊழியர்களான 47 வைத்தியர்களிடமும் , 71 தாதிமார்களிடமும் 18 , சிற்றூழியர்களிடமும் மொத்தமாக 136 பேரிடம்  வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.  
  • 47 வைத்தியர்களில்  45 பேர் வைத்தியர் ஷாபிக்கு எதிராக எந்தவொரு குற்றச் சாட்டையும் முன்வைக்க வில்லை. ஏனைய இருவரில் மயக்க மருந்தூட்டும் பெண் வைத்திய நிபுணர் , வைத்தியர் ஷாபியின் சத்திர சிகிச்சைகள் சந்தேகத்திட்கிடமானவை என்று வேறு சிலர் கூறுவதாக தெரிவித்துள்ளார். இப் பெண் வைத்தியருக்கும் ஷாபிக்கும் இடையில் ஒரு முறை வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் , இவருக்கு எதிராக வைத்தியர் ஷாபி வைத்திய சாலை பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்சாட்சியமளித்த அடுத்த வைத்தியர் தெரிவித்துள்ளதாவதுவைத்தியர் ஷாபியின்  அறுவை சிகிச்சைகளின் இறுதி கட்டத்தில் தன்னோடு பணியில் ஈடுபடும் ஏனைய வைத்தியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்த அனுப்பிவிடுவதாக தெரிவித்துள்ளார்
          இவர்கள் இருவர் உட்பட  வாக்குமூலங்களை பதிவு செய்த 47 வைத்தியர்களும்   வைத்தியர் ஷாபி  பலோபியன் நாளங்களை நசுக்கியதையோ  சேதப் படுத்தியதையோ தாம் கண்களால் காணவில்லை என்றே வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக புலனாய்வு துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்
  • வாக்குமூலமளித்த 71 தாதிமார்களில் எவருமே எந்த வொரு குற்றச்சாட்டையும் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்க வில்லை
  • வைத்தியர் ஷாபியுடன் பணிபுரிந்த 18 சிற்றூழியர்களில் எவருமே ஷாபிக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க வில்லை.  
வைத்தியர் ஷாபி பலோபியன் நாளங்களை சேதப் படுத்தினார்என்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளாது நிரூபிக்க வேண்டிய விசித்திரமான நிலைப்பாடு
              பலோபியன் நாளங்கள் சேதமாக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக மிகச் சிறந்த பரிசோதனை முறையென துறைசார்ந்த நிபுணர்களால்  சிபாரிசு செய்யப் பட்ட எஸ் எச் ஜி ஆய்வு சம்பந்தமாக குறித்த பெண்களுக்காக  ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்ய நீதிமன்ற அனுமதியை புலனாய்வு துறையினர் கோரினர்அத்தருணத்தில் குறித்த பெண்களின் சார்பான வழக்கறிஞர்கள் இதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். அதற்கான காரணமாக குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப் படும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் , மேலும் இப்பரிசோதனைகள்  மரணத்தை உண்டுபண்ண கூடியதாகவும் உள்ளதென குறித்த வழக்கறிஞர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள். மேலும் இப்பரிசோதனை சம்பந்தமாக வைத்தியசாலை பணிப்பாளர் சரத் வீர பண்டார மிகத் தெளிவான விளக்கமுடையவர் என்றும் தெரிவித்துள்ளனர்.                    ( இவ்வழக்கின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார ஒரு பல் வைத்திய நிபுணராவார் என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும்.) 

இச்சன்ந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த  குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டாரவிடம் இது சம்பந்தமான விளக்கத்தை கோரியுள்ளார். இதற்கு விளக்கமளித்த குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார , “ குறித்த பரிசோதனையின் போது யோனியிநூடாக ஒரு வகையான டையினை (நிறத் திரவத்தினை) உட் செலுத்துவதாகவும் , இதன் காரணத்தால் குறித்த திரவம் பெண்களின் உடலுக்குள் அகத்துறிஞ்சப் படுவதால் பரிசீலனைக்கு உட்படுத்தப் படும்  பெண்களுக்கு மரணத்தை உண்டு பண்ணக் கூடிய நிலை ஏற்படலாம் என்றும் புற்று நோய் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளதாகவும்   விளக்கமளித்துள்ளார்.  
அத்துடன் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டாரவையும் குறித்த விசாரணைக் குழுவில்  சேர்த்துக் கொள்ளுமாறு அப்பெண்கள் சார்பான வழக்கறிஞர்கள் மஜிஸ்ட்ரேட் நீதிவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கிணங்க குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டாரவையும் இந்த விசாரணைக் குழுவில் சேர்த்துக் கொள்ளும் படி புலனாய்வு துறைக்கு  நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்தருணத்தில் புலனாய்வு துறை சார்பாக நீதிமன்றில் கருத்துரைத்த SSP பி எஸ் திசேரா அவர்கள் , குறித்த இந்த விசாரைணக் குழுவில் துறை சார்ந்த வர்களை அதாவது மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய்கள் சம்பந்தமான விஷேட நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களை மாத்திரமே இக்குழுவில் நியமிக்கப் படவேண்டும் என்றும் ஆனால் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார அவர்கள் ஒரு பல் வைத்தியர் மாத்திரமேஎன்றும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும் இறுதியில் குறித்த பெண்களின் சார்பான வழக்கறிஞர்களின் வேண்டுதலுக்கு இணங்கவும்குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டாரவின் விளக்கத்திற்கமையவும் மேற்குறித்த  பெண்களுக்கான  கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கு குருநாகல் மஜிஸ்ட்ரேட் நீதிவான் தடை விதித்தார்.  
குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டாரஎஸ் எச் ஜிபரிசோதனை முறை பற்றிய  நீதிமன்ற உரையை  வழக்கு பதிவேடுகளில் உட்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்ட நீதிவான்
        மேலும் இவ்வழக்கு சம்பந்தமான மேற்படி நிகழ்வுகளை குறிப்பெடுத்து ஆவணமாக பதிவு செய்த புலனாய்வு துறையினருக்கு , குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டாரவின் தெளிவு படுத்தலோ அவர் சம்பந்தமான விடயங்களோ குறித்த ஆவணங்களில் எங்கும் பதியப் பட்டிருக்க வில்லை. இது சம்பந்தமாக குறிப்பிட்ட உத்தியோகத்தர் ஊடாக நீதி மன்ற தட்டெழுத்தாளரிடம் வினவப் பட்டபோது , “குறித்த ருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டாரவின்பதிவுகளை பதிவேடுகளுக்கு உட்படுத்த வேண்டாம் என்று   மஜிஸ்ட்ரேட் நீதிவான் மூலம் தனக்கு உத்தரவிடப் பட்டதால் தாம் அவற்றை உட்படுத்த வில்லைநீதி மன்ற தட்டெழுத்தாளர் தெரிவித்துள்ளார். இது விடயமாக புலனாய்வு  துறையினர் கடந்த 11 ந் திகதி நீதிமன்றத்திற்கு சமர்பித்த மேலதிக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.  
நீதி மன்றத்திற்கு பொய் உரைத்த குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார மற்றும் அவரது வழக்கறிஞர்கள்
மகபேற்று மற்றும் பெண்ணியல் நோய்கள் சம்பந்தமான விஷேட  நிபுணத்துவம் இல்லாத பல் வைத்தியரான குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார மற்றும் குறித்த பெண்கள் சார்பான  வழக்கறிஞர்கள்  எஸ் எச் ஜி பரிசோதனை முறை சம்பந்தமாக இவ் வழக்கின் போது நீதிமன்றில் பொய் உரைத்துள்ளார்கள். அதாவது இவர்களின் வாதப் படி மற்றும் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார வின் தெளிவு படுத்தலின் படி எஸ் எச் ஜி பரிசோதனைக்குட்படுத்தப் படும் பெண்கள் மரணத்தை உண்டுபண்ணக் கூடிய  அளவுக்கு ஆபத்தானதும் , புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியப் பாடுகளைக்   கொண்டதுமாகும்.  
        இது சம்பந்தமாக புலனாய்வு துறையினரால் இலங்கையின் சில  பிரதான வைத்திய சாலைகளிடம் கடந்த ஐந்து வருடங்களில் மேகொள்ளப் பட்ட  இவ்     “ எஸ் எச் ஜி “  பரிசோதனைகள் பற்றியதொரு விரிவான அறிக்கை கோரப் பட்டுள்ளது.   அதற்கிணங்க வழங்கப் பட்ட  கொழும்பு களுபோவில வைத்தியசாலையின் அறிக்கையின் படி கடந்த  2014ம் ஆண்டு முதல்  2019 ஜூன் மாதம் வரை 399 “ எஸ் எச் ஜிபரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் , பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட எந்தவொரு பெண்ணுக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவோ , மரணத்தை ஏற்படுத்தவோ இல்லை என்று நிரூபணம் ஆகியுள்ளது
 காலி கராபிட்டிய வைத்தியசாலையின் அறிக்கை படி 2014 இருந்து  2019 வரை 2213 பேருக்கு மேற்படி பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அதற்கமைய குறித்த நான்கு பேருக்கு மாத்திரம் ஓரளவான சுவாச அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால்அது தவிர  வேறு பாரதூரமான பக்கவிளைவுகளோ, மரணத்தையோ எவருக்கும் ஏற்படுத்தப் படவில்லை என்று தெரியவந்துள்ளது
 அனுராத புர வைத்தியசாலையின் அறிக்கையின் படி 2014 ஆண்டிலிருந்து  2019 ஜூன் வரை 257 பேருக்குஎஸ் எச் ஜிபரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் , இவர்களில் எவருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவோ , மரணத்தை ஏற்படுத்தவோ இல்லை என்று நிரூபணம் ஆகியுள்ளது

இதே போல் இலங்கை புலனாய்வு பிரிவினரால் பெறப்பட்ட  ராகம , ஸ்ரீ லங்கா ஹோஸ்பிடல்ஸ், ஆசிரி சென்றல் , பேராதெனிய  போன்ற இலங்கையின் 09 பிரசித்த வைத்திய சாலைகளில் மேற்கொள்ளப் பட்ட  பல்லாயிரக்கணக்கானஎஸ் எச் ஜிபரிசோதனைகளின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகளின்  படி குறித்த காலப் பகுதியில் சுமார் 12 000 எஸ் எச் ஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவற்றில் எவருக்கும் குறிப்பிட்டுக் கூறும் வகையில் அசாத்தியமான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவோ மரணத்தை ஏற்படுத்தவோ இல்லை என்றும் தெரிய வந்துள்ளது

Post a Comment

0 Comments