Ticker

6/recent/ticker-posts

இந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைது!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  நேற்று இரவு கைதுசெய்யப்பட்டு  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டு மதிலை குதித்து அவரது வீட்டுக்குள் சென்ற சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று  இரவு அவரை கைதுசெய்துள்ளனர்.

ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
இதனையடுத்து, முன் பிணைக்கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
குறித்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பா.சிதம்பரம் நேற்றே கைது செய்யப்பட்டார்.
இதேவேளை காஷ்மீர் விவகாரத்தை திசைத்திருப்பவே பா.சிதம்பரத்தை கைதுசெய்துள்ளதாக அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ஐ.என்.எஸ் மீடியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 305 கோடி அந்நிய நேரடி முதலீட்டில் ஊழல் நடைபெற்றுள்ளதாக நிதி அமைச்சகத்தின் புலனாய்வு துறை குற்றஞ்சாட்டியது.
இந்த விவாகாரத்தில் அவரது மகன்  கார்த்திக் சிதம்பரம்  மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments