Ticker

6/recent/ticker-posts

இன்று முதல் கொம்பனித் தெருவிலிருந்து கோட்டைக்கு படகு சேவை!

கொழும்பு கொம்பனி வீதியில் இருந்து கோட்டை வரையில் பேரை வாவியில் படகு சேவை ஒன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவா்களின் ஒரு திட்டத்தின் அடிப்படையில்,  கொழும்பு நகரில் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மூன்று படகுகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  தற்போது கொழும்பு கோட்டையிலிருந்து கொம்பனி வீதிக்கு  பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் அரை மணித்தியாலம் எடுக்கும் நிலையில்,  இந்த படகு சேவையின் ஊடாக பத்து நிமிடங்களில் பயணிக்க முடியும் என அறியவருகிறது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த சேவையை இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட  அபிவிருத்தி சபையின் இணைத் தலைவருமான முஜீபுா் றஹ்மானும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

Post a Comment

0 Comments