Ticker

6/recent/ticker-posts

கஞ்சா வைத்திருந்த “கஞ்சிபானை”க்கு ஆறு வருட சிறைத்தண்டனை

 முகமது நஜிம் முகமது இம்ரான் அல்லது கஞ்சிபானை இம்ரானுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று 6 ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை விதித்தது.

செப்டம்பர் 18, 2013 அன்று மாளிகாவத்தையில் வைத்து இவா் கைது செய்யப்பட்டிருந்தார்.  5 கிலோ300 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக இவா் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

கஞ்சிபானை இம்ரானுக்கு ஆஜரான சட்டத்தரணி லக்ஷமன் பெரேரா, சந்தேக நபா் போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்படி, கொழும்பு மேல்நீதிமன்றம் மூன்று குற்றங்களில் ஒவ்வொன்றிற்கும் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை விதித்து  உத்தரவிட்டது.

Post a Comment

0 Comments