முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமையை தொடர்பாக அமெரிக்கா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா இவ்வாறு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த கடிதம் தம்மிடம் உள்ளதாக குறிப்பிட்ட ஜீ.எல். பீரிஸ் கோத்தாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடவில்லை என சிலர் குற்றம் சுமத்தி வருவதாகவும் குறிப்பிட்டாா். எனினும் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ச ஏற்கனவே இலங்கை கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 Comments