கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வெற்றியீட்டினால் வெற்றியீட்டினால் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை 6 மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் .
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் அரசினை நம்பி வாக்களியுங்கள் என கோரவில்லை. ஈபிடிபி கட்சியாகிய எம்மை நம்பி வாக்களியுங்கள் என்றே மக்களை கோருகிறேன். இப்போதுள்ள தமிழ் தலைமைகள் போல நாம் அரசு ஏமாற்றி விட்டது. இந்தியா ஏமாற்றி விட்டது என கூக்குரல் போடமாட்டோம். நாம் அவ்வாறு ஒருநாளும் கூறியதில்லை என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாம் சொன்னதையே செய்து வருகிறோம். அதனையே செய்வோம் .நாம் அன்றிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே கூறி வருகிறோம். அதனை பலப்படுத்தி ஒரு தீர்வினை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம். ஆனால் இங்குள்ள சக தமிழ் கட்சிகள் தீர்வு கொள்கைகள் பற்றி கதைத்து கொண்டு இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த அல்லது பெற்றுக் கொடுக்கவும் எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
மக்கள் எமக்கு போதுமான வாக்கு பலத்தை தரவேண்டும். பலம் கிடைத்தால் விரைவில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். எமக்கு ஆதரவு தாருங்கள் என்றே கூறுகிறோம். ஆட்சியாளர்களை நம்புங்கள் எனக் கூறவில்லை. நாம் எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
கடந்த காலங்களில் சொன்னதை செய்தியும் செய்தும் காட்டியுள்ளோம். நாம் ஆதரவு தெரிவிக்கும் கோத்தாபயவின் ஆட்சி மலர்ந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் இழுத்தடிப்புகள் இல்லாது விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். வீடு காணி இல்லாதவர்களுக்கு அதை வழங்குவோம். இவ்வாறான பல முக்கிய பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வினைக் காண்போம் என்றும் கூறினாா்.

0 Comments