ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை நம்பிக்கை நிதியம் ஒன்றின் கொண்டு வந்து நிா்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஹிஸ்புல்லாவின் “பட்டிகலோ கெம்பஸ்” தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும்போது திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது இஸ்லாமிய சட்டத்தை கற்பிக்கும் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் குறிப்பிடட அவா், இந்த நிறுவனத்தை சவுதி நாட்டு தனவந்தர்களின் உதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்ததாக அதன் ஸ்தாபகராக இருக்கும் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆரம்ப காலம் முதல் தெரிவித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டாா்.
சவுதி நாட்டு தனவந்தர்கள் சிலர் இந்த நாட்டில் இருக்கும் வறிய மக்கள் கல்வியை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நிறுவனத்திற்காக உதவி செய்திருக்கின்றனா். அவ்வாறு இருக்கும்போது இந்த நிறுவனத்துக்காக அனுப்பப்பட்ட பணத்தை ஹிஸ்புல்லாவின் குடும்ப கணக்குக்குத் திருப்பிக் கொண்டது தான் எமக்கு இருக்கும் பிரச்சினை.
மாறாக இந்த நிறுவனம் ஷரியா சட்டம் கற்பிக்கும் நிருவனமாக எங்கும் பதிவு செய்யப்படவில்லை.
இஸ்லாமிய சட்டத் துறையை கற்பிக்கும் பல்கலைக் கழகங்கள் பெரும்பாலானை உலகில் இருக்கின்றன. அதேபோன்று கிறிஸ்தவ சட்டம், பௌத்த சிந்தனை கற்பிக்கும் துறைகள் பல பல்கலைக்கழகங்களில் இருக்கின்றன. இந்த நிறுவனத்தை அமைக்க சட்டவிரோதமாக பணம் வந்து இருக்குமானால் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.
அத்துடன் இந்த நிறுவனத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என சிலர் தெரிவிக்கின்றனர் . அரசாங்கத்தின் கீழ் இதனை கொண்டு வருவதன் மூலம் இன்னும் பிரச்சினை அதிகரிக்கும். ஏனெனில் இருக்கும் பல்கலைக்கழகங்களை அரசாங்கத்தினால் முறையாக நிர்வாகிக்க முடியாமல் இருக்கிறது. அதனால் நம்பிக்கையாளர் நிதியம் ஒன்றை அமைத்து இந்த நிறுவனத்தை அதன் கீழ் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் பிள்ளைகள் உயர் கல்வியைப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
0 Comments