Ticker

6/recent/ticker-posts

கோத்தா வெற்றிபெற சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியமாம்!

தனக்கு  சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியம் இல்லை என்று ஒருபோதும் கூறவில்லையென்றும்  தனது வெற்றிக்கு சிறுபான்மை வாக்குகள் அவசியம் இல்லையென்று தான் கூறியதாக போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியம் இல்லை என்று தான் கூறியதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும்  இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் வாக்குகளையும் எதிர்பார்ப்பதாகவும் தொிவித்த அவா்  போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோத்தாபய இவ்வாறு கருத்து தொிவித்திருந்த போதிலும், இவாின் பின்னணியில் .யங்கும்   எலிய, வியத்மக போன்ற அமைப்புகளில்  அவருக்கு சார்பாக பிரசாரம் செய்து வருபவா்கள் மோசமானஇனவாதக் கருத்துகளையே பரப்பி வருகின்றனா்.

கோத்தாபயவுக்கு ஆதரவாக இயங்கி வரும் பௌத்த பிக்குகள் தீவிர இனவாதிகளாகவும்,  கடும் போக்கு கொண்டவா்களாகவும்  இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments