Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொற்று : ஈரானின் இறப்பு எண்ணிக்கை 988 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  ஈரானின் இறப்பு எண்ணிக்கை 988 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 135 புதிய இறப்புகள் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

 கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 988 ஆக உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,178 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் மொத்தம் 16,169 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  வைரஸால் பாதிக்கப்பட்ட 5,389 பேர் குணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தெரிவித்தள்ளார்..

Post a Comment

0 Comments