இத்தாலியில் இருந்து வருகை தந்த இலங்கையர்களில் அதிகமானவர்கள் புத்தளம் மாவட்டத்திலே இருப்பதாகவும் அவர்கள் எப்போதும் சுகாதார அமைச்சு வழங்கும் நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறும் வைரஸ் பரவாதவாறு செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளளர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளில் புதிதாக 6 வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் மாரவில, களனிய மற்றும் உடுகம்பெல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. tamil.adaderana.lk/
0 Comments